தனுஷின் ஜகமே தந்திரம் படத்தினை அவரது தயாரிப்பு நிறுவனமே வாங்கி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.இந்த நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ஓடிடியில் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ,இதனால் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமிடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இது குறித்து நேற்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் தியேட்டர் உரிமையாளர்கள், கண்காட்சியாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டை நானும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெளியான புது தகவலின்படி தனுஷின் தயாரிப்பு நிறுவனம் ஜகமே தந்திரம் படத்தினை வாங்கி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏனெனில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான மாஸ்டர், கபடதாரி படங்களுக்கு ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தனுஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உண்மையில் ஜகமே தந்திரம் படத்தினை ஓடிடியிலா அல்லது திரையரங்குகளில் வெளியிடுகிறார்களா என்பது இன்னும் முடிவு செய்யபடவில்லை
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…