தனுஷ் சார் மூன்றாவது முறையாக தேசிய விருது வாங்குவார் – நட்டி..!!
கர்ணன் படத்திற்காக மூன்றாவது முறையாக நடிகர் தனுஷ் தேசிய விருது வாங்குவார் என்று நடிகர் நட்டி நடராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், நட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் தற்போது படத்தின் நான்காவது பாடலான கர்ணனின் யுத்தம் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலும் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான இசைவெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் போன்ற பலர் கலந்துகொன்டுள்ளார்கள்.
இந்த விழாவில் பேசிய நடிகர் நட்டி நடராஜன் ” இந்த படத்திற்காக மூன்றாவது தேசிய விருது கலைப்புலி தாணுவிற்கும், நடிகர் தனுஷிற்கும் மூன்றாவது தேசிய விருது வாங்குவார். அதைபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் வாங்குவார் எல்லாரும் இணைந்து படத்தை தயார் செய்திருக்கிறார்கள் இசை சந்தோஷ் நாராயணன் பின்னருக்காரு. என்றும் கூறியுள்ளார்.
நேஷனல் அவார்ட் ~ கிடைக்கும் ❤
அதுக்குமேல #ஆஸ்கர் தட்டும் ~ நட்டி ப்ரோ ????????#KarnanPressMeet #Karnan#UttradheengaYeppov https://t.co/HHOAbJYyv8
— DhanushAppu (@VpmKk__DFC) March 31, 2021