மாஸ்டர் திரைப்படம் குறித்து தனுஷ் ட்வீட்..!

Default Image

தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் பாருங்கள் என்று தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மற்றுமின்றி பல நடிகர்கள் காத்துள்ள திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது பேசியதாகவும் தகவல் கசிந்தது அதனை தொடர்ந்து நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழு மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாவது சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாசாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம்போல வேறு எதுவும் இல்லை. தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தை தியேட்டர்களில் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்