ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். அதைப்போல் ஹாலிவுட் திரையுலகில் தற்போது கால் பதித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் இயக்குனரான ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி மற்றும் ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் பிரபலமான நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) மற்றும் கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, அனா டி அர்மாஸ், மற்றும் ஜூலியா பட்டர்ஸ் மேலும் பலர் முக்கியமான நடிகர்கள் மாற்றும் நடிக்கவுள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தி கிரே மேன் படத்தில் இணைவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தனது ரசிகர்களுக்கு நன்றி என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…