கையில் வாளுடன் கம்பீரமாக நிற்கும் தனுஷ்… நாளை காத்திருக்கும் சம்பவம்..??
நாளை இரவு 07.01 மணிக்கு கர்ணன் படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திலிருந்ததை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திற்கான டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். இதனை தொடர்ந்து நாளை வெளியாகும் டீசருக்கான நேரத்தை கலைப்புலி தாணு தற்போது ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். ஆம் நாளை இரவு 7.01 மணிக்கு படத்திற்கான டீசர் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
Set your alarm clock at 7:01 pm tomorrow #KarnanTeaserArrives @dhanushkraja @mari_selvaraj @Music_Santhosh @thinkmusicindia @ZeeTamil @KarnanTheMovie #KarnanArrivesOnApril9 pic.twitter.com/hRxWrf4XZa
— Kalaippuli S Thanu (@theVcreations) March 22, 2021