போட்டிக்கு போட்டி…பழைய பாணியில் இறங்கடிக்க காத்திருக்கும் தனுஷ் – சிம்பு.!

Published by
கெளதம்

தமிழ் சினிமாவில் ரஜினி -கமல் மற்றும் விஜய் -அஜித் என்று இவர்களுடைய படங்களுக்கு இடையே போட்டி நிலவுவது போல் அதற்கு அடுத்தபடியாக, தனுஷ் –  சிம்புவிற்கு போட்டிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இருவருமே ஒன்றாக ஒரே ரேஞ்சில் நடித்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில், இவர்களது திரைப்பயணத்தில் முக்கியமான தருணமாக 50 படமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்த இரு நடிகர்களின் திரைப்படங்களும் 50-வதை நெருங்கியுள்ளது. அதன்படி, நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது அந்த திரைப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது எனவும் தனுஷ் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். ஏற்கனவே, தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்த நிலையில், இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த் உடல்நிலை…விஜய்க்கு முன் முந்திய சூர்யா.! கோடானகோடி வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்..

அதுபோல், சிம்புவும் வல்லவன் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை வழங்கினார். இந்நிலையில், சிம்புவும் தனது 50 திரைப்படம் மீதான கவனத்தை திசை திருப்பியுள்ளாராம்.  தற்போது, சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்தும் வருகிறார்.

கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

அதே பாணியில் சிம்புவும் தனது 50 படத்தை எழுதி, இயக்கி அவரே நடிக்க உள்ளதாக ஒரு தகவல் நம்ப தக்க சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. இதில் கூடுதல் தகவல் என்னெவென்றால், இந்த படத்தை அவர்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எது என்னவோ ஒரு வேலை இது உண்மை என்றால், இவர்களது பழைய பார்முலா ஒர்க்வுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், அது அவர்களது 50 திரைப்படம் என்பதால் அதன் எதிர்பார்ப்பை அதிகமாக்கி உள்ளது.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago