நடிகர் தனுஷ் நானும் அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
அதன் பிறகு படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் மற்றும் வெளியான நிலையில், இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 2 வாரங்கள் கழித்து (Netflix) இணையத்தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியா (Netflix) ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகர் தனுஷ் .அவர் பகிர்ந்த பதிவில் தியேட்டர் உரிமையாளர்கள், கண்காட்சியாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டை நானும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் . இதிலிருந்து தனுஷூம் ஜகமே தந்திரம் படத்தினை திரையில் காணவே விரும்புகிறார் என்பது தெரிகிறது . இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் என்ன முடிவு செய்துள்ளார் என்பது விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…