உலகம் சுற்றும் வாலிபனாக களமிறங்க உள்ளாரா தனுஷ்?!

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அக்டோபர் 4ஆம் தேதி அசுரன் திரைப்படம் வெளியாக உள்ளது. கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளளது.
அதனை அடுத்து, பட்டாஸ். ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடிக்க உள்ளார். இவர் தற்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க லண்டன் சென்றுள்ளார்.
இந்த படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதாம். ஆதலால் இப்படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பு வைக்கலாம் என படக்குழு யோசித்து வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025