புது பட கெட்டப்பில் பழனி முருகனை தரிசித்த ‘அசுரன்’ தனுஷ்!
- தனுஷ் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
- இப்பட ஷூட்டிங் இடைவேளையில் பழனி முருகன் கோவிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்று வந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக பட்டாஸ் திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு தற்போது மதுரை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
அதற்கு இடையில் தற்போது தனுஷ் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார். அப்போது தனது புதிய பட கெட்டப்புடன் வித்தியாசமான மீசை கெட்டப் என அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.