நடிகர்தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!
- நடிகர் தனுஷின் 40 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்
- படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-தேதி வெளியாகியறது.
நடிகர் ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து நடிகர் தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஒன்றை இயக்குகிறார் இப்படம் தனுஷின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எனவே டி40 என்று குறிப்பிட்டே செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்து உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
படப்பிடிப்புகள் எல்லாம் லண்டன் மற்றும் மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் கடைசி 3 நாட்களுக்கான படபிடிப்பு மட்டும் வரும் 6-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதோடு டி40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.அதில் படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
We are preping for the last 3 days of shoot starting on the 6th. We will announce the date of the #firstlook upon completion, which is on the 9th!#10YearsOfYNOT@dhanushkraja @sash041075 @karthiksubbaraj @Music_Santhosh @chakdyn @RelianceEnt @onlynikil
— Y Not Studios (@StudiosYNot) February 1, 2020