தனுஷ் எங்கள் மகன் தான் – மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்!

மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதிகள் இருவரும் தனுஷ் தங்கள் மகன் எனவும், அவர் தங்களுக்கான பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் எனவும் முன்னதாக மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மேலூர் தம்பதிகளின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள மேலூர் தம்பதிகள் தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என கூறியுள்ளனர். ஆனால், இதற்கும் போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் இதோடு விட்டுவிடாமல் தற்போது மீண்டும் மேலூர் தம்பதிகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் தனுஷின் பிறப்பு சான்றிதழ் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே, தனுஷிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை அறிய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025