இரவு 8 மணிக்கு கர்ணன் அழைப்பு… காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்..!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் இன்று இரவு 8 மணிக்கு வெளியாக வுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடலான “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் வெளியாகும் என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.