ஜகமே தந்திரம் ரிலீஸ்.! தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டரை ஒட்டிய தனுஷ் ரசிகர்கள்.!
ஜகமே தந்திரம் படத்தினை தியேட்டரில் ரிலீஸ் செய்ய கோரி தனுஷ் ரசிகர்கள் தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ,அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டையே நானும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஜகமே தந்திரம் படமானது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விரும்பும் ரசிகர்கள் நெல்லையில் போஸ்டர் ஒன்றை ஒட்டி ஜகமே தந்திரம் படத்தினை தியேட்டரில் ரிலீஸ் செய்ய கோரி தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
அவர்கள் ஒட்டிய போஸ்டரில்,எங்கள் அன்புத் தலைவர் தனுஷ் அவர்களின் வெற்றி படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்குகளை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு ஒய்நாட் நிறுவன தயாரிப்பாளரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.ரசிகர்களின் இந்த வேண்டுகோளை தயாரிப்பாளர் ஏற்பாரா?இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.