கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..! கர்ணனை தொடர்ந்து “நானே வருவேன்” படத்திற்கான அப்டேட்..!

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்திற்கான இசைப்பணிகளை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொடங்கியுள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம். இதில் கர்ணன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்காவிற்கு சென்று “தி க்ரே மேன்” என்ற படத்தில் நடித்துவருகிறார். இரண்டு மாதங்கள் கழித்து 43 வது படத்திற்கான அணைத்து படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்.
இந்த நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து தனது அண்ணன் மற்றும் இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்றுகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான இசைப்பணிகளை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொடங்கியுள்ளார். அவருடன் செல்வராகவன் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கர்ணன் அப்டேட்டை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இந்த அப்டேட்டும் உற்சாகத்தை அளித்துள்ளது.
#naanevaruven music set
Loading ⏳???????????? @dhanushkraja @selvaraghavan @thisisysr always this combo gives next level music ✨
Waiting ???? pic.twitter.com/Io2lw8stEe— Gowri ✨sankar???? (@itz_D_additct) February 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025