ட்வீட்டரில் தனது பயோவை மாற்றிய தனுஷ்! எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா?
அசுரன் திரைப்படம் பல சிறப்புகளை பெற்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பயோவை ASURAN/actor என்று பெருமையுடன் மாற்றியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம், பசுபதி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தை பார்த்து பொதுமக்கள் தனுஷின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவரை ‘நடிப்பு அசுரன்’ என புகழத் தொடங்கினர். இப்படம் ஊடகங்களில் பல்வேறு விருதுகளை பெற்ற நிலையில், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படமாகும். அசுரன் திரைப்படம் பல சிறப்புகளை பெற்ற நிலையில், தெலுங்கிலும் இப்படம் ரீமேக் ஆகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பயோவை ASURAN/actor என்று பெருமையுடன் மாற்றியுள்ளார்.