நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது. பேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் , படத்தின் பெயர் வெளியாகவில்லை, ஆனால் கோடை விடுமுறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் எஸ் தாணு, அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர். தொடர் படப்பிடிப்பில் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…