சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸூ மரணம் பாடலுக்கு தனுஷ் மற்றும் சாரா அலிகான் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அக்ஷய் குமார்,சாரா அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தனுஷ் அவர்கள் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் சாரா அலிகான் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாரா அலிகான் பகிர்ந்து “தலைவாவுடன் பயிற்சி” என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டிருந்தார் .இந்த வீடியோவின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “மாஸூ மரணம் ” பாடல் இடம் பெற்றுள்ளது.தற்போது இந்த ஒர்கவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…