தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ்-க்கும்,தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.ஆனால்,அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி பொருந்தவில்லை என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டிருந்தனர்.ஏனெனில்,நடிகர் தனுஷை விட இரண்டு ஐஸ்வர்யா வயது மூத்தவராக கருத்தப்படுகிறார்.ஆனால்,வயது வித்தியாசம் என்பது இருவருக்கும் இடையில் ஒரு பெரிய பிரச்சனையாக எப்போதும் தெரிந்ததில்லை. இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சிறப்பாகவே வாழ்ந்து வந்த நிலையில்,தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில்,தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என பிற மொழிகளிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும்,தங்களது 18 ஆண்டுகள் நிறைவு பெற்ற திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக,நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
“18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும்,ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் இணைந்து பயணித்து வந்தோம்.
இந்த வாழ்க்கை பயணத்தில் வளர்ச்சி,புரிதல்,சரிசெய்தல் மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம்.ஆனால்,இன்று நாங்கள் வாழ்க்கை பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்.ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.மேலும் எங்களை நாங்களே புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம்.
தயவு செய்து எங்கள் முடிவை மதித்து,இதிலிருந்து நாங்கள் இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தையும்,தேவையான தனியுரிமையையும் எங்களுக்கு வழங்கவும்.ஓம் நமசிவாய”,என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம்,இருவரும் பிரிவதாக ஐஸ்வர்யா அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்,நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா ஜோடி பிரிவதாக அறிவித்தது தென் இந்திய சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,தற்போது தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிவை அறிவித்திருப்பது திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…