பாலிவுட் நடிகை சாரா அலிகான் அவர்களின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சமீபத்தில் கூட பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமின்றி நடிகை ரேகாவின் வீட்டில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் சாரா அலிகானின் குடும்பத்தில் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவரது டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் உடனடியாக தனிமைப்படுத்தல் முகாமில் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாரா அலிகான் தற்போது அக்ஷய் குமார் மற்றும் தனுஷூடன் இணைந்து ‘அத்ராங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…