தனுஷின் புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்ட தனுஷ் பட நடிகை ஐஸ்வர்ய லட்சுமி!

தனுஷுடன் தற்பொழுது ஜகமே தந்திரம் எனும் படத்தில் நடித்திருந்தாலும் தனுஷின் இன்னொரு படத்திலும் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் தான் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கூறியுள்ளார்.
மலையாளத்தில் வெளியாகிய மாய நதி எனும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிய நடிகை தான் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் வெளியாகி ஆக்சன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழில் நடித்திருந்தார், இதன் மூலம் தமிழ் திரை உலகில் இவர் பிரபலமாகினார். அதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் எனும் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். அந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது.
இந்நிலையில், இதுகுறித்து இவர் அளித்துள்ள பேட்டியில், ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுடன் நடிப்பதற்கு முன்பாக இன்னொரு தனுஷின் படத்தில் நடிப்பதற்கும் தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படத்திற்கான ஆடிஷன் நடக்கும்போதே தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் முக்கியமான பெண் வேடத்தில் நடிக்க கூடிய கதாபாத்திரத்திற்கு தான் சரியாக இருந்தாலும், அந்த படத்திற்கான பாசை தனக்கு சரியாக பேசத் தெரியவில்லை என்கிற காரணத்தால் தான் அந்த படத்தில் இருந்து தன் நீக்கப்பட்டதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார். மேலும் படம் எந்த படம் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025