தனுஷ் 43 படத்தின் ஆடியோ குறித்த அப்டேட்கள் படப்பிடிப்புகள் தொடங்கியதும் அறிவிக்கப்படும் என்று ஜி. வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ , வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் , ராட்சஷன் பட இயக்குநரான ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி தயாரிக்கும் ஒரு படம் மற்றும் இந்தியில் ‘அத்ராங்கி ரே’ ஆகிய படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் . இந்த படத்திற்காக ஏற்கனவே ஜி. வி பிரகாஷ் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது D43 படம் குறித்த அடுத்த அப்டேட்டை அவர் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, தனுஷ் 43 படத்தின் பாடல்கள் அனைத்தும் கம்போஸ் செய்து விட்டதாகவும், அவை முடிந்ததும் அதன் வடிவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன் மேலும் சில அப்டேட்களை அறிவிப்பதாகவும். மேலும் தனுஷூடன் ஒரு சூப்பர் காம்பினேஷன் இந்த படத்தின் மூலம் கிடைத்துள்ளது விரைவில் D43 படத்தின் ஆடியோ வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…