டெக்ஸாமெதாசோன் சோதனை.. நன்மைகள்.? தீமைகள்..? – ஆய்வில் வெளியான தகவல்.!

Published by
murugan

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் உள்ள “RECOVERY “என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனையில் Dexamethasone என்ற நுரையீரல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா நோயாளிகளை வழங்கிய போது அவர்கள் விரைவில் குணமடைந்து தெரியவந்தது. இதுதொடர்பான, ஆய்வில் வென்டிலேட்டர் அல்லது ஆக்ஸிஜன்  சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்த மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் உயிர்களை காப்பாற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்து குறித்து இங்கிலாந்து நேற்று முழு சோதனையின் முடிவுகளை வெளியிடப்பட்டது. அதில், வென்டிலேட்டர்களில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் நன்மைகளை இது அளிக்கிறது என உறுதிப்படுத்தபட்டுள்ளது.

ஆனால், சீக்கிரம் வழங்கினால் தீங்கு விளைவிக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் வென்டிலேட்டர்களில் உள்ள நோயாளிகளுக்கு சிலருக்கு இந்த மருந்தை கொடுத்து உள்ளனர்.  சிலருக்கு கொடுக்கவில்லை 28 நாட்களுக்குப் பிறகு  இவர்களின் இறப்பு விகிதம் ஒப்பிடும்போது, வென்டிலேட்டர்களில் உள்ள நோயாளிகளில் மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் 29.3 % இருந்துள்ளது.

மருந்து பெறாதவர்களுக்கு இறப்பு விகிதம்  41.4 சதவீதமாக இருந்தது. இதனால், இறப்பு விகிதத்தில் 29 சதவீதம் குறைந்துள்ளது. ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நோயாளிகளில் டெக்ஸாமெதாசோனின் நன்மை குறைவாக உள்ளது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்ட நோயாளிகளில் இந்த மருந்தை பெற்றவர்களின் இறப்பு விகிதம் 23.3 சதவிகிதம் இருந்தது. ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நோயாளிகளில் இந்த மருந்தை பெற்றதவர்களின் இறப்பு விகிதம் 26.2 சதவிகிதமாக உள்ளது.

இந்நிலையில், எந்தவொரு ஆக்ஸிஜன் பெறாத ஒரு குழுவில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து எந்த நன்மையும் அளிக்கவில்லை என தெரியவந்தது. ஆய்வில், Dexamethasone மருந்தை பெற்றவர்கள் 17.4 சதவீதம் பேர் இறந்தனர்.

அதைப்  பெறாதவர்கள் 14 சதவிகிதத்தினர் இறந்தனர். இதனால், இந்த சோதனையில் இந்த மருந்து இறப்பு அபாயத்தை அதிகரிப்பதாகக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Dexamethasone மருந்து ஆய்வில் நன்மைகள், தீமைகள் இரண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Published by
murugan

Recent Posts

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

4 minutes ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

43 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

1 hour ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

2 hours ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago