இந்த திருநீறின் மகிமைகள் பற்றி ஒருசில வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை இந்த திருநீறு வைத்துக் கொள்வதாலும் நம்மால் பெறமுடியும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான் என்பதை நமக்கு உணர்த்துவது இந்த திருநீரு. ‘நீறு’ என்றால் சாம்பல். திருநீறு என்றால் மேன்மை பொருந்திய நீறு என்ற பொருளைக் குறிகின்றது.
இதற்கு விபூதி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. விபூதி என்றால் ஞானம் ஐஸ்வர்யம் என்ற பொருளை தருகிறது. பிறப்பையும் இறப்பையும் இந்த பூமியில் அனுபவித்து கடைசியில் ஈசனை அடையச்செய்வது திருநீறு என்பது இதன் மூலமாகும். இத்தகைய திருநீறினை அணியும் முன் இதற்குறிய மந்திரத்தை கூறுவது இன்னமும் சிறப்பாக இருக்கும்.
திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.
என்ற இந்த மந்திரத்தை தினமும் கூறி திருநீறி அணிந்து வந்தால் சகல சௌபாக்கியமும் பெற்று இறைவன் அருள் கிடைக்கும்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…