இறைவன் மாமனாரை போன்றவன்..!!! திருமுருக கிருபானந்த வாரியாரின் அதிரவைக்கும் விளக்கம்..!!!

Default Image
  • இறைவனின் மகிழ்ச்சி குறித்த திருமுருக கிருபானந்த வாரியாரின் விளக்கம் நம்மை தெளிவடைய வைப்பதாக உள்ளது.
  • இறைவனின் மகிழ்ச்சி மாமனாரை போன்றது  என்பது இந்த செய்தி.

இறைவனின் மகிழ்ச்சி குறித்த திருமுருக கிருபானந்த வாரியாரின் விளக்கம் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது. இவர் ஒரு ஆன்மீக  சொற்பொழிவில் , இறைவனின் மகிழ்சி குறித்து தந்த விளக்கமானது, ஒரு  தந்தையானவர் தான் வியர்வை சிந்தி சேர்த்த செல்வங்களை அத்துனையையும் ஒரே மகனாக இருந்தாலும் அதை அனுபவிக்க அனுமதிப்பானே தவிர இதை முற்றிலும் தர நினைக்க மாட்டான். தனது காலத்திற்கு பிறகே அது தன் மகனுக்கு சேரட்டும் என நினைப்பான். இதுவே உலகிலுள்ள ஒவ்வொரு தந்தைகளின் எண்ணமாகும்.

Related image

இதில் இன்னொருவகையில், தான் தன் மகளை பாராட்டி சீராட்டி வளர்த்து அந்த பெண்ணை பல்வேறு சீர் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பும்தந்தை  (மாமனாரானவர்), தனது மகளுக்கு கொடுத்த ஆடை,ஆபரணங்க்கள்,சீர் என அனைத்தையும் தனது அனுபவிப்பதை கண்டு மனம் மகிழ்கிறார்.அது போலதான் இறைவனும் தான் படைத்த  உலகில் உள்ள அனைத்தையும் அனுபவிக்கும் மனிதர்களாகிய நம்மை மாமனாரைப் போல (வடிவில்) மகிழ்கிறார் என நகைச்சுவை கலந்து தெரிவிக்கிறார்.எனவே நாம் இறைவன் படைத்து அனுபவிக்க கொடுத்த அனைத்தையும் வீணடிக்காமல் பயன்படுத்தி இறைவனை மகிழ்விப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்