இறைவழிபாடு எனது நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் கனப்பொழுதில் தீர்க்கும் வலிமை கொண்டது. அத்தைய பலன் மிகுந்த இந்த பிராத்தணைகளை எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்வது என்று அறிந்து செய்தால் அதிக பலன்களை பெறலாம் இவற்றைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஞாயிறு: ஒளிப்பொருந்திய கடவுளான சூரியனை வணங்க வேண்டிய நாள். அன்று ஆதித்ய ஹிருதயம்’ என்கிற சுலோகத்தைச் சொல்லி வணங்கினால் ஆரோக்கியம் சீராகும் கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.
திங்கள்: சிவா சிந்தனைக்கு உரிய நாள் ஆலயம் சென்று தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி ஆகிய பாடல்களைப்படி அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.
செவ்வாய்: செவ்வாய் என்றாலே அது முருகப்பெருமானின் வழிபாட்டிற்கு உரிய நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று 6 விளக்குகள் ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். அன்று கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.
புதன்: பெருமாளை வணங்க வேண்டிய நாள். துளசி மாடத்திற்கு பூஜை செய்யவும் உகந்த நாள். அன்று விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகிய பாடல்களைப் பாடினாலே வாழ்வில் வளம் சேரும்.
வியாழன்: குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்களே அத்தைய குருவை வணங்குவதற்கு ஏற்ற நாள் அதே போல். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பெரியவர் போன்ற மகான்களை ஆராதனை செய்து வழிபாடு செய்வது நல்லது. பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நலன்களைப் பெற்றுத்தரும்.
வெள்ளி: அம்மன்,மகாலட்சுமி வழிபாடு செய்வது நன்மைதரும். அன்று கோ-பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைத்து பூஜித்தால் மிக விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசித்து வருவது நல்ல பலனை தரும். மகாலட்சுமி ஸ்தோத்ரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் போன்றவற்றைப் படிப்பதும் நல்லது.
சனி: ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்று இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உரிய சிறப்பான நாளாகும்.அன்று ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலிய நூல்களைப் படித்தறிய ஏற்ற தினங்கள் ஆகும்.விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் வணங்கலாம்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் பயின்று ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து…
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…