இன்றைய நாள் எப்படி இருக்கு 12-ராசிக்காரர்களுக்கு..!

மேஷ ராசி அன்பர்களே :
இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையப் போகிறது.மேலும் இன்று உங்களின் பெற்றோர் வழியில் ஆதரவு கரம் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.தங்களின் மதிப்பும், மரியாதையும் மேன்மேலும் உயரும் ஒரு நல்ல நாள். பணத்தேவைகள் எல்லாம் எளிதில் பூர்த்தியாகின்ற நாள். தங்கள் பிள்ளைகள் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே :
இன்று தங்களை ஆச்சரியப்படத்தக்க கூடிய சம்பவங்கள் நடைபெறுகின்ற நல்லநாள்.மேலும் இன்று பெற்றோர் நலனில் கூடுதலான அக்கறை எடுத்துக் கொண்டு மகிழ்வீர்கள். தங்களின் பொது வாழ்க்கையில் புகழ் கூடுகின்ற நாள் மனையில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும் வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி அன்பர்களே :
இன்று உங்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும் நல்ல நாள். இன்று தங்களின் இளைய சகோதர வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கட்சிதமாக கிடைக்கும் ஒரு நல்ல நாள்.மனதிற்கு பிடித்த பொருட்களை வீட்டிற்கு வாங்கி மகிழ்வீர்கள்.
கடக ராசி அன்பர்களே :
இன்று நீங்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நல்ல நாள். மேலும் தங்கள் எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் மூலம் நன்மை ஏற்படுகின்ற நாள். சகோதர வழி ஒற்றுமை பலமடங்கு பலப்படும். பொருட்ச் சேர்க்கை ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே :
இன்று தங்களின் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்குகின்ற நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.மேலும் இன்று பக்குவமாகப் பேசி காரியங்களை எல்லாம் சாதித்து மகிழும் வாய்ப்பு உள்ளது.இன்று தங்களது வீட்டிற்கு . உறவினர்களின் வருகை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கன்னி ராசி அன்பர்களே :
இன்று தங்களின் ஆசைகளை தாரளாமாக செலவிட்டு மகிழுகின்ற நாள். வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது.பயணத்தின் போது தங்களது பொருட்கள் மீது சற்று கவனம் தேவை.
துலாம் ராசி அன்பர்களே :
நெடுநாளாக தள்ளிப்போன காரியம் எல்லாம் இன்று தானாக முடிவடையும் ஒரு நல்ல நாள். மேலும் பிரபலமானவர்ககளை சந்தித்து அதன் முலம் பெருமை காண்பீர்கள்.மனம் மகிழுகின்ற வகையில் புதிய ஆடை அறும் ஆபரணச் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் காரணமாக மாற்று மருத்துவத்தல் உடல் நலம் மேன்மை பெறும்.
விருச்சிக ராசி அன்பர்களே :
இன்று தங்களுடைய தொழில் வளர்ச்சியானது மேலோங்குகின்ற நாள். தொலைபேசி வழி தகவல்கள் எல்லாம் புதிய ஒப்பந்தங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.மேலும் இன்று தங்களுக்கு முக்கியப்புள்ளிகளின் அறிமுகம் ஏற்பட்டு அந்த அறிமுகம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும்.
தனுசு ராசி அன்பர்களே :
இன்று பொறுமையோடு செயல்பட வேண்டிய அமைதியான நாள்.மேலும் தங்களுக்கு தடை, தனவிரயம் ஏற்பட்டாலும் இறை அருள் துணை நிற்கும் . தங்களின் உடனிருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் அவர்களின் நடந்து கொள்வது நல்லது. கோபத்தை குறைத்து காரியத்தை சாதிக்க வேண்டிய நாள்.
மகர ராசி அன்பர்களே :
இன்று தங்களை வாழ்வில் புதிய பாதை புலப்படுகின்ற நல்ல நாள். கடந்த இரண்டு நாட்களாக உங்களுக்கு ஏற்பட்ட தடைகள் , தாமதங்கள் எல்லாம் அகன்று சற்று மனம் ஆறுதல் அடையும் மேலும் மனம் நிம்மதி பெறும் வகையில் ஒரு பயணம் உருவாகலாம். தங்களது தந்தை வழி உறவினர்களால் இன்று நன்மை உண்டு.
கும்ப ராசி அன்பர்களே :
இன்று தங்களின் நண்பர்கள் தங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நல்ல நாள். உங்களின் உத்தியோக முயற்சிக்கு இன்று வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முடிவுகளிலும் மனக்குழப்பம் வேண்டாம்.எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நல்ல நாள்.
மீன ராசி அன்பர்களே :
இன்று தங்களின் ஆரோக்கியம் சீராகி மனம் ஆனந்தமடையும் நல்ல நாள். அன்புமிகுந்த நண்பர்களின் ஆதரவு பன்மடங்கு பெருகுகின்ற நாள்.தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் உங்களை விட்டு விலகுவர். மறதியால் இதை இழந்து விட்டோமே என்று தவித்த காரியமொன்றை கட்சிதமாக செய்து முடிப்பீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025