இந்தி எதிர்ப்பு வாசகஙகளுடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், இந்தி திணிப்பு போராட்டங்களும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம் இந்தியராக இருந்து விட்டு இந்தி தெரியாத என்ற கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்தி தெரியாத மருத்துவர்களை ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் வெளியேற சொன்னதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இந்தி எதிர்ப்பு வாசகங்களுடன் கூடிய டீசர்ட்களை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா ‘I am a தமிழ் பேசும் Indian’ என்ற வாசகத்துடன் கூடிய டீசர்ட்டையும், அவரது அருகில் மெட்ரோ படத்தில் நடித்த ஸ்ரீரிஷ் ‘இந்தி தெரியாது போடா’ என்ற டீசர்ட்டையும் அணிந்துள்ளார். மேலும் இதே வாசகஙகளுடன் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகியும்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் டீசர்ட்டை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…