எந்த நடிகருடன் நடிக்க ஆசை..? கங்கனா ரனாவத் நச் பதில்.!!
தமிழில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற கேள்விக்கு கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். தற்போது இவர் தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே தலைவி திரைப்படத்தின் ப்ரிவியூ ஷோ பார்த்த அனைவரும் நல்ல விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத்திடம் தொகுப்பாளினி பாவனா உங்களுக்கு எந்த தமிழ் நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்டார்.? அதற்கு நடிகை கங்கனா ரனாவத் “விஜய் சாருடன் நடிக்க ஆசை… அவர் இங்கு அல்டிமேட் ஸ்டாராக இருக்கிறார். ரஜினியுடன் பணிபுரியவும் ஆசை” என பதிலளித்துள்ளார்.