தேசிங்கு பெரியசாமி-நிரஞ்சனி தம்பதியினருக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட தயாரிப்பாளர் திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.இதில் நிதி அகர்வால்,ரக்ஷன் ,நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் நடித்த காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியன் மகளான நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்துள்ளார் .
அதன் பின் இந்த காதல் ஜோடி பிப்ரவரி 25-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.இந்த புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் தேசிங்கு பெரியசாமி -நிரஞ்சனி தம்பதியினருக்கு திருமண பரிசாக கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தேசிங்கு பெரியசாமி,மிக்க நன்றி சார். பெரிய ஆச்சரியம். இந்தப் பரிசுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசாக வழங்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…