அடடா…! செல்போனை மட்டுமே பார்த்து நடப்பவர்களுக்காக “மூன்றாவது கண்” கண்டுபிடிப்பு..!
- சாலையில் செல்லும்போது செல்போனை மட்டுமே பார்த்து நடப்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக,கண் போன்ற ஒரு கருவியை,
- தென்கொரிய தொழில்துறை வடிவமைப்பாளரான பாங் மின்-வூக் என்பவர் உருவாக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு அதிகரித்து வருகிறது.இதனால்,மக்கள் பலர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல்,சாலைகளில் நடக்கும்போது கூட செல்போனை மட்டுமே பார்த்துக்கொண்டு நடக்கின்றனர்.இதன்காரணமாக, விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில்,தென் கொரியாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் என்பவர்,சாலைகளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும் வகையில்,மனிதனின் கண்ணைப் போன்ற ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.
மேலும்,நெற்றியில் பொருத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவியானது “மூன்றாவது கண்” என அழைக்கப்படுகிறது.
ஏனெனில்,இந்த கண் போன்ற கருவியில் 2 மீட்டர் தூரத்திற்குள் எதிரே வரவுள்ள ஆபத்து குறித்து எச்சரிக்கும் வகையில்,கைரோ என்ற சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதனால்,சாலைகளில் செல்போன் பயன்படுத்திக்கொண்டே செல்பவர்களுக்கு இந்த கருவியானது பயனுள்ளதாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் தெரிவித்துள்ளார்.
எனவே,இந்த கருவியானது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.