தேவையற்ற அடிவயிற்று கொழுப்பை குறைக்க எளிய ஆரோக்யமான வழி.
உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி இருக்கும் நிலையில், சில சத்தான உணவுகள் மூலம் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம், அந்த வகையில் பசுவின் பாலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள தூய்மையான நெய் அல்லது ‘தேசி’நெய் உடல் பருமனை குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், நெய் உடல் எடை, மற்றும் தேவையற்ற தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சில சுகாதார வள்ளுநர்கள் இந்திய நெய்யானது உடல் எடையை அதிகரிக்கும் மேலும் கொழுப்பை சேர்க்கும் என்று கருதுகின்றனர்.
ஆனால் நவீன விஞ்ஞானம் கூட இப்போது ஆயுர்வேதத்தின் ஆரோக்கியமான நெய்யின் சமையல் நன்மைகளை ஆதரிக்கிறது. அதில் உள்ள ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் மெலிந்த உடலை மேம்படுத்தவும், கொழுப்பு அளவை குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் உள்ள அமினோ அமிலம் கொழுப்பு செல்கள் அளவு சுருங்குவதற்கும் உதவுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, எடை பார்ப்பவர்கள் நெய்யில் உள்ள கொழுப்பை மட்டுமே பார்ப்பதால், அதில் உள்ள நன்மையை அறிய முயற்சி செய்வதில்லை. அதிக அளவில் தேசி நெய் சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமற்றதாக இருக்கும். அதனால்தான் பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் ஒரு நாளுக்கு இரண்டு மூன்று டீஸ்பூனிற்கு மேல் சாப்பிடக்கூடாது என்று பரிந்துரைக்கின்றனர்.
ஆயுர்வேதத்தின்படி, காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை உட்கொள்வது, குறிப்பாக கோடைகாலத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கு இது மேலும் வலு சேர்க்கும். எனவே, நீங்கள் மெலிதாக அல்லது தொப்பை கொழுப்பை அகற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், தினசரி உணவில் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…