இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர்.
இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொணடார்.அதன்பின்னர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே நான்கு புதிய இடைக்கால அமைச்சர்களை நியமித்தார்.இதனிடையே,மத்திய வங்கி ஆளுநரும் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும்,இலங்கை தொழிலாளர் கட்சிக்கு(CWC) இரண்டு எம்பிக்கள் உள்ள நிலையில்,இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற்றுள்ளது.இதனையடுத்து,இரண்டு எம்பிக்களில் இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டைமான் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இதனிடையே,நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார்.இலங்கை சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…