வறுமை காரணமாக மனச்சோர்வடைந்த மனிதன் ஐந்து குழந்தைகளை பாகிஸ்தானின் ஜம்பர் கால்வாயில் வீசினார்.
பாகிஸ்தானின் வறுமை மற்றும் மோசமான நிதி சிக்கல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஒரு தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டோகியில் உள்ள ஜம்பர் கால்வாயில் தனது ஐந்து குழந்தைகளை தூக்கி வீசினார். இதனால், இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு மற்ற மூன்று குழந்தைகள் காணாமல் போயுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கால்வாயிலிருந்து 1 வயது அஹ்மத் மற்றும் 4 வயது ஃபிசா ஆகிய இரு குழந்தைகளின் சடலங்களாக மீட்டனர். மீதமுள்ள மூன்று பேருக்கான தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிடுவார் என்றும் அவர் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தைகளைச் சந்திக்கச் சென்றபோது நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனை தொடர்ந்து, அவர் தனது குழந்தைகளை தனது ரிக்ஷா மூலம் ஜம்பர் கிராமத்திற்கு அருகிலுள்ள பி.எஸ்-லிங்க் கால்வாய்க்கு அழைத்துச் சென்று கால்வாயில் வீசினார் என தெரிவித்தனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…