லண்டனில் ஜூலை 19 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல நாடுகளில் தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியிருந்தாலும் இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் தற்பொழுது தான் கொரோனா தனது தீவிரத்தை கட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகளவில் பரவி வருகிறது. இதனையடுத்து குளிர்காலம் வர உள்ளதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் ஊரடங்கு அறிவிக்கக் கூடும் என எச்சரித்திருந்தார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கிலாந்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானனோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட்டுள்ளனராம். இது திங்கள் கிழமையை விட 37.3 சதவீதம் அதிகம். மே மாத நடுப்பகுதியில் இருந்து பாதிப்புகள் படிப்படியாக அதிகரிப்பதுடன், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதுமாக இருப்பதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்.
கொரோனா தோற்று அதிகளவில் பரவி வரும் சூழ்நிலையிலும், லண்டன் மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் டென்னிஸ் பந்துகளை எறிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…