பிரான்ஸில் எரிபொருள் கொள்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்…!!
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரிவிதிப்பை கண்டித்து நடைபெறும் தொடர் போராட்டங்கள் வலுவடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் வார இறுதிநாட்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செயிண்ட் ஜெர்மைன் தெருவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், குப்பைத் தொட்டிகள் உட்பட இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டகாரர்கள் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவி விலக கோரி முழக்கம் எழுப்பி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்தனர்.இதனால் பிரான்ஸ் நாட்டில் பதற்றம் நிலவி வருகின்றது.