சீனாவில் அதிகரிக்கும் டெல்டா கொரோனா..!புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

Default Image

சீனாவில் தற்போது டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சமயத்தில் சீனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தியதாக அறிவித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாஞ்சிங் விமான நிலையத்தில் 9 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சீனாவின் 12 க்கும் அதிகமான மாகாணங்களில் 20க்கும் அதிகமான நகரங்கள் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தால் தினசரி சீனாவில் லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதனுடன் புதிய பயண தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா கொரோனா பரவிய நாஞ்சிங் நகரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்