தானமாக வாங்கிய கருப்பையால்.. ஆண் குழந்தைக்கு அம்மாவான பெண்.. பிரகாசத்தை உணர்ந்ததாக மனதிறந்து பேச்சு..

Published by
Kaliraj
  • கருப்பையை தானமாக பெற்று குழந்தை பெற்ற பெண்.
  • தனது குழந்தை வரத்தின் அருமையை விளக்கும் அருமையான பதிவு.

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர்  இவரது கனவர் பெயர் ட்ரூ, இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்தும் குழந்தை இல்லை. எனவே இந்த தம்பதி மருத்துவரிடம் சென்றபோதுதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தம்பதியில் ஜெனிஃபருக்கு மட்டும்   ”கோப்ரெட்ச் `மேயர்-ரோகிடான்ஸ்கி-கோஸ்டர்-ஹவுசர்” (MRKH) என்ற  குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்த குறைபாடு  பெண்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் முக்கியமான  குறைபாடு. இந்தக் குறைபாடுடையவர்களுக்கு பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை வளர்ச்சியடையாமலிருக்கும். இதனால் அவர்களால் தங்களது கர்ப்பப்பையில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது.

Related image

இதை அறிந்த இந்த தம்பதிக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கடந்த 2019-ம் ஆண்டில், ஜெனிஃபருக்கு  10 மணிநேர அறுவைசிகிச்சை மூலம்  இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பை அவருக்குப் பொருத்தப்பட்டது. இந்தச் சிகிச்சை நடந்த சில வாரங்களில் ஜெனிஃபர் கருவுற்றார். பின் அவருக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது பற்றி அவர் கூறும்போது, “நான் உண்மையான பிரகாசத்தை  என் வாழ்வில் உணர்ந்தேன்; நான் கருவுற்றிருந்தபோது என் குழந்தையின் எனது வயிற்றில் உதையை உணர்ந்தேன். இந்த நினைவுகள்  என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்” என்று குறிப்பிட்டார். இந்த ஜெனிஃபர், ட்ரூ தம்பதிகள்  தங்கள் குழந்தைக்கு `பெஞ்சமின்’ என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். ஒரு தாயின் குழந்தை பாக்கியத்தின் அவசியத்தை இந்த தாய் ஜெனிஃபர் கூறிய கருத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

 

Published by
Kaliraj

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

10 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

11 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

12 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

13 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

13 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

15 hours ago