தானமாக வாங்கிய கருப்பையால்.. ஆண் குழந்தைக்கு அம்மாவான பெண்.. பிரகாசத்தை உணர்ந்ததாக மனதிறந்து பேச்சு..
- கருப்பையை தானமாக பெற்று குழந்தை பெற்ற பெண்.
- தனது குழந்தை வரத்தின் அருமையை விளக்கும் அருமையான பதிவு.
அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர் இவரது கனவர் பெயர் ட்ரூ, இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடந்தும் குழந்தை இல்லை. எனவே இந்த தம்பதி மருத்துவரிடம் சென்றபோதுதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தம்பதியில் ஜெனிஃபருக்கு மட்டும் ”கோப்ரெட்ச் `மேயர்-ரோகிடான்ஸ்கி-கோஸ்டர்-ஹவுசர்” (MRKH) என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளார். இந்த குறைபாடு பெண்களின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் முக்கியமான குறைபாடு. இந்தக் குறைபாடுடையவர்களுக்கு பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை வளர்ச்சியடையாமலிருக்கும். இதனால் அவர்களால் தங்களது கர்ப்பப்பையில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது.
இதை அறிந்த இந்த தம்பதிக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, கடந்த 2019-ம் ஆண்டில், ஜெனிஃபருக்கு 10 மணிநேர அறுவைசிகிச்சை மூலம் இறந்த கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட கர்ப்பப்பை அவருக்குப் பொருத்தப்பட்டது. இந்தச் சிகிச்சை நடந்த சில வாரங்களில் ஜெனிஃபர் கருவுற்றார். பின் அவருக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது பற்றி அவர் கூறும்போது, “நான் உண்மையான பிரகாசத்தை என் வாழ்வில் உணர்ந்தேன்; நான் கருவுற்றிருந்தபோது என் குழந்தையின் எனது வயிற்றில் உதையை உணர்ந்தேன். இந்த நினைவுகள் என் வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்” என்று குறிப்பிட்டார். இந்த ஜெனிஃபர், ட்ரூ தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு `பெஞ்சமின்’ என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றனர். ஒரு தாயின் குழந்தை பாக்கியத்தின் அவசியத்தை இந்த தாய் ஜெனிஃபர் கூறிய கருத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.