சுவையான…. இனிமையான…. தேங்காய் லட்டு செய்வது எப்படி தெரியுமா…?
லட்டு வகைகள் அனைத்துமே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். லட்டு பொதுவாக பூந்தியில் செய்யப்படக்கூடியது என்று தன அனைவரும் நினைப்பதுண்டு. ஆனால் லட்டு பல வகைகளில் உள்ளது. ரவா லட்டு, பூந்தி லட்டு என சொல்லி கொண்டே போகலாம்.
தற்போது நாம் சுவையான, இனிமையான தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
- தேங்காய் துருவல் – ஒன்றரை கப்
- சர்க்கரை – 2 கப்
- தண்ணீர் – அரை கப்
- ஏலக்காய் போடி – சிறிதளவு
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு வாணலியில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு தயார் செய்ய வேண்டும். இதில் பாலை சேர்க்க வேண்டும். பாலை சேர்ப்பதால் பாகில் தூசு தனியாக பொங்கி திரண்டு வந்து விடும். அதனை அப்படியே நீக்கி விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
தேங்காய் துருவல், ஏலக்காய் பொடியை ஒன்றாக சேர்த்து, அதில் பாகை ஊற்றி, கொஞ்சம் சூடாக இருக்கும்போதே உருண்டைப் பிடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். இப்பொது சுவையான, இனிமையான தேங்காய் லட்டு ரெடி.