உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வில் தகவல்.
கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு, காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை மாற்றியமைத்தது. அதன்படி, காற்றில் உள்ள துகள்களின் சராசரி 1 மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
காற்று மாசு குறித்து ஆய்வு
உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. இந்த நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் மாசு தொழில்நுட்ப நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.
டெல்லி முதலிடம்
இந்த ஆய்வில், உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 93 நகரங்களில் 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…