டெல்லியில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேற்கு கடற்கரையில் ‘டவ்-தே’ புயல் ஏற்பட்டதன் விளைவாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.குறிப்பாக, டெல்லியில் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் 60 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.இதற்கு முன்னதாக,டெல்லியில் 1976 ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 மி.மீ அளவு பெய்த மழைதான் இதுவரை அதிகபட்ச மழைப்பொழிவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து,டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 119.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால்,இந்த மழைப்பொழிவானது டெல்லியில் இதுவரை மே மாதங்களில் பதிவாகாத அதிகபட்ச மழைப் பொழிவு என்றும்,
மேலும்,இந்த தொடர் மழையின் காரணமாக,டெல்லியில் தற்போது கடும் வெப்பம் குறைந்து,நேற்று 23.8 டிகிரி செல்சியஸ் அளவிலேயே வெப்ப நிலை பதிவானது.அதனால்,இது 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு,அதாவது 70 ஆண்டுகளுக்கு பின்னர் பதிவாகும் மிகக் குறைந்த பட்ச வெப்பநிலை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இதனால்,டெல்லியின் தற்போதைய அதிகபட்ச வெப்பநிலையானது ,பனிப்பிரதேசங்களான ஸ்ரீநகர் (25.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் தர்மஷாலா (27.2 டிகிரி செல்சியஸ்) ஆகியவற்றை விடவும் குறைவாக பதிவாகியுள்ளது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…