தலைநகர் டெல்லியில் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை தேர்தல் வருகின்ற 8ந்தேதி நடக்கிறது. இதில் அம்மாநிலத்தை ஆளும் ஆம்ஆத்மி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
இதில் ஆம்ஆத்மி கட்சி தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் டெல்லியில் ஆட்சியை இம்முறையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்புடன் பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு இன்று மாலையுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…