கண்டிப்பாக நான் படம் நடிப்பேன் – வடிவேலு மகன்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் வடிவேலுவின் மகன் தனக்கு நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்திற்கு ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் ரசிகர்கள் அவரை “வைகைப்புயல்” என்று அழைத்தனர். அப்போதிலிருந்து இப்போது வரை அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம்.
இந்நிலையில், வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் “எனக்கு நடிக்க ஆசை இருக்கிறது.. அதற்கு பல நாட்கள் உள்ளது… பாலிவுட் நடிகர் ஜிம் கேரி போல சில கைகால் அசைவுகள் சில முக அசைவுகள், போல நான் நடிப்பேன்..தமிழில் நல்ல இயக்குனர்கள் அமைந்து எனக்கு தகுந்த மாதிரி கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்… ஆனால் கண்டிப்பாக நான் படம் நடிப்பேன்..
அப்பாவிடம் நான் நடிக்கபோறனு சொல்லிருக்கேன்.. அதற்கு அவர் நடிப்பா ஆனா நடிப்பு அவ்வளவு சுலபம் இல்லை அதிகாலை விரைவில் எந்திரிக்க வேண்டும்.. அதுக்கு தகுந்த மாதிரி வேலை செய்யவேண்டும் என சொன்னாரு.. அப்பா மிக பெரிய நடிகர் மாமேதைனு தான் சொல்லனு..அவர் நடித்த அணைத்து படமும் பிடிக்கும்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் கதையில், நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.