கடத்தல்காரர்களிடன் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்…அதிபர் மைத்ரிபால சிறிசேன…!!
போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து நாட்டை பாதுகாத்து நாட்டைபாதுகாக்க வேண்டுமென்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில், போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தலையீடு மூலம் காவல்துறை உயரதிகாரிகள் இடமாற்றம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். அதிகாரிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் தம்மிடம் நேரடியாக தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டார்.