அருந்ததியாக அவதாரம் எடுக்கும் தீபிகா படுகோண்..?
அருந்ததி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை தீபிகா படுகோண் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் சலூரி கோட்டேஸ்வர ராவ் இசையில் நடிகர் சோனுசூட் மற்றும் நடிகை அனுஷ்கா நடித்த திரைப்படம் அருந்ததி, மேலும் இந்த படத்தில் சயாஜி ஷிண்டே மற்றும் மனோரமா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர், திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகிய இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவதாக கூறப்படுகிறது, இந்த ரீமேக் உரிமையை அல்லு அரவிந்த் வைத்துள்ளதாகவும் தகவலால் வெளியாகியுள்ளது, மேலும் இந்த ஹிந்தி ரீமேக்கில் அனுஷ்கா நடித்த அருந்ததி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோண் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளது, மேலும் இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.