தீபத் திருநாள்: குழந்தகைளுக்கு பிடித்த வெல்ல பொரி.!

Default Image

கார்த்திகை தீபத் திருநாள் இன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பது வழக்கம். அதில், கொழுக்கட்டை, பொரியுருண்டை, மாவிளக்கு, அப்பம் போன்றவை வைப்பர் அந்த வகையில், கார்த்திகை தீபம் அன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம்.

கார்த்திகை வெல்ல பொரி செய்வது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:

அவல் பொரி – 10 கப்

வெல்லம் பொடி செய்தது – 2 1/2 கப்

பொட்டுகடலை – 1 கப்

தேங்காய் – அரை மூடி

ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்

சுக்குப்பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை:

தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது வறுத்தெடுங்கள். அடுத்தாக பொரியை நன்றாக புடைத்து, சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பொரி மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் சேர்த்து கொள்ளங்கள்.

மேலும், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின், அதனை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி பாகு ஆக காய்ச்சு கொள்ளுங்கள்.

இப்பொழுது, அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி கீழே இறக்கி வைத்து அதில் பொரியை போட்டு நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும், உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்