அமெரிக்காவில் 90 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 4,891,330 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 320,134 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் அதிகமாகா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும்ம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான்.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால், அமெரிக்காவில் இதுவரை, 1,550,294 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 91,981 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரசால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,003 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025