பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது!
பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரமாகிய கராச்சியில் 100 க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற விமானம் ஒன்று தீ பிடித்து எரிந்து கீழே கட்டிடத்தில் விழுந்தது. இதனால் விமானத்தில் உள்ளவர்களுக்கும் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அந்த விமான விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 60 பேரின் உடல்கள் ஜே.பி.எம்.சி மருத்துவமனையிலும், 32 பேரின் உடல்கள் சி.எச்.கே மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.