பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது.! போலீசார் வழக்கு பதிவு.! ஷாக்கான திரையுலகம்.!
தமிழில் உயிரின் உயிரே ,அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி,நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து விழுந்துள்ளார்.
அதன் பின்பு,இரவு 10:30 மணியளவில் அவர் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CMRI) கொண்டு செல்லப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனனர். இதனையடுத்து,கேகே மறைவுக்கு அவரது ரசிகர்கள்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேகேவின் குடும்பத்தினர் தற்போது கொல்கத்தா வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து பாடகர் கேகே மரணம் தொடர்பாக நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேகேவின் குடும்பத்தினரின் சம்மதம் கிடைத்ததும், விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், பிரேத பரிசோதனைக்கு பிறகு கே.கே.வின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை கிடைத்தபிறகு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.