நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம்.! சல்மான்கான் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு.!

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதற்கு சல்மான்கான், கரன்ஜோகர் உள்ளிட்ட பல பேர் தான் காரணம் என்று கூறி வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சுசாந்த் சிங்கின் தாய்மாமா, சுசாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பு புகாரை அளித்திருந்தார். ஆனால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தற்கொலை என்பது சரியான முடிவு அல்ல என்ற விழிப்புணர்வை தனது படங்களின் மூலம் கூறியவர் எப்படி தற்கொலை செய்வார் என்ற சந்தேகம் பலரிடமும் எழுந்ததை அடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரின் மரணத்திற்கு நீதி கோரி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த் மரணத்திற்கு சல்மான்கான் உட்பட சினிமாவில் உள்ள 8பேர் தான் காரணம் என்று கூறி வழக்கறிஞரான சுதீர் குமார் ஓஜா வழக்கு பதிவு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங்கை சுமார் 7 படங்களிலிருந்து சல்மான் கான் உள்ளிட்ட பலரின் சூழ்ச்சியால் நீக்கியதாகவும் ,எனவே பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சுஷாந்த் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ,அதுவே தற்கொலை செய்ய அவரை தூண்டியதாகவும் கூறி பீகாரில் உள்ள முசாபர்பூர் நீதிமன்றத்தில் சல்மான்கான்,கரன்ஜோகர் , சஞ்சய் லீலா பன்சாலி ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது ஐபிசி சட்டப்பிரிவு 306,109,504,506 ஆகியவற்றின் கீழ் சுதீர் குமார் வழக்கு பதிவு செய்துள்ளார் . தற்போது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்